Popular Posts

Wednesday, August 17, 2011

ஊழலை ஒழிக்க மந்திரக்கோல் எதுவும் இல்லை: பிரதமர்



புது தில்லி, ஆக. 17: "ஊழலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஊழலை உடனே கட்டுப்படுத்த மத்திய அரசிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

சமூக சேவகர் அண்ணா ஹசாரே கைது தொடர்பாக மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலக அரங்கில் முக்கிய இடத்தை நோக்கி இந்தியா வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க பல தீய சக்திகள் செயல்படுகின்றன. இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் சக்திகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாது என்று மன்மோகன் கூறினார்.

ஆனால், பிரதமரின் விளக்கம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி தெரிவித்தார்.

"உண்ணாவிரதத்துக்கு 22 நிபந்தனைகளை தில்லி போலீஸார் விதித்தது ஏன்? காங்கிரஸ் போராட்டம் நடத்தும்போது 5 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொள்ளமாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்குமா' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அண்ணா ஹசாரே கைது விவகாரத்தில் அரசியல் ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் காவல் துறையினரின் பின்னால் நின்று கொண்டு நடவடிக்கை எடுத்தது தவறானது என்று அவர் கூறினார்.

மக்களவையில் விளக்கம்: இப் பிரச்னை குறித்து, மக்களவையில் விளக்கம் அளித்துப் பேசும்போது "நாடாளுமன்றம் மட்டுமே சட்டத்தை உருவாக்க முடியும். அதில் அண்ணா ஹசாரே தனது கருத்தை திணிக்க முயலுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தும்' என்று மன்மோகன் சிங் கூறினார்.

அவர் மேலும் கூறியது: வலிமையான லோக்பால் சட்டம் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை ஹசாரே கொண்டிருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்த அவர் தேர்ந்தெடுத்த முறை சரியானதல்ல.

ஹசாரேவின் போராட்டத்தால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால்தான் தடுப்பு நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டார்.

எந்த ஒரு பிரிவினருடனும் மோதலை அரசு விரும்பவில்லை. ஆனால், அரசின் அதிகாரத்தையும், நாடாளுமன்றத்துக்கு உள்ள தனிப்பட்ட உரிமையையும் ஒரு பிரிவினர் மீற முயலும் போது அமைதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது கடமையாகும் என்றார் பிரதமர்.

"அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும்' என்று பிரதமர் தெரிவித்தபோது, எதிர்க்கட்சியினர் "வெட்கம், வெட்கம்' என்று கோஷங்களை எழுப்பினார்கள் .

பிரதமரின் விளக்கத்தையடுத்துப் பேசிய பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானி, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த நெருக்கடி நிலையை நினைவுபடுத்துவதாகக் குறிப்பிட்டார்.

அப்போது அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்வானி நீலிக்கண்ணீர் வடிப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சல் குற்றம் சாட்டினார்.

அதையடுத்து, பன்சல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Tuesday, August 16, 2011

Employment onus on India

Mumbai, Aug. 16: India will need to generate at least 5.5 crore additional jobs by 2015 if it wants to maintain the current ratio of employed people to total population, a study done by Crisil Research said today.

The study, Employment in India ' Uneven and Weak, said this number of 5.5 crore would be twice the number of jobs created during 2005-10 and that creating these jobs would pose a challenge without adequate policy support. While the current ratio of employed people to the total population stands at 39 per cent, the number of 5.5 crore also comes after accounting for many people employed today either retiring or losing their jobs.

According to the study, despite higher economic growth in the second half of 2000s, the country has been unable to generate sufficient number of jobs in manufacturing and services. For instance, the GDP growth increased to 8.6 per cent during 2005-10 from 6 per cent during 2000-05, but the net addition to jobs remained almost flat at around 2.7 crore during these two periods.

"While net additions to jobs during the second half of the 2000 decade have been higher than the much-discussed two million number, this is clearly not enough to ensure inclusive growth," it said.

Crisil said if the country wanted a solution in this regard, it should look at other countries, including China. The study noted large scale labour-intensive manufacturing units are a rarity in India, since the real cost of employing labour is high.

Moreover, it is also virtually impossible for a manufacturing company with more than 100 employees to fire any employee even if it is facing bankruptcy. Therefore, demand for labour has not increased fast enough in manufacturing.

However, in the service sector, particularly in high-skilled services such as financial intermediation and business services, there is a shortage of skilled labour that is constraining job creation.

Friday, August 12, 2011

Widescreen: India 2011

2011 has been marked by lows and highs, gains and losses, anguish and exhilaration, despair and triumph. This has been the year that fearless whistle-blowers forced corruption out of the cracks. The year of the Jan Lokpal Bill. The year that terror reminded us of the tenacity we must summon up to fight it. The year that the World Cup came home. In telling pictures, we look at the events that defined 2011 in India.

Insects In Amber Fossils Insects inside 20 Million years old amber fossils

amber-fossil-110811-04


A picture released on August 9, 2011 in Lima by the Peruvian Paleontological Meyer-Hönningen Museum of Chiclayo in northern Peru, shows detailed fossilized insect remains preserved in amber for over 23 million years, found in an excavation in the Santiago river basin, in the Amazon region (which borders Ecuador). According to Klaus Hönningen, the find consists of hundreds of pieces of the gemstone made from fossilized plant resin of up to 12cm containing various types of insects like Psocoptera, Diptera, Coleoptera, Hemiptera and spiders, belonging to the Neogene Era, early Miocene. Amber has been found only in Brazil, the Patagonia in Argentina and in French Guyana. Credit: AFP PHOTO Museo Paleontologico Meyer-Honninger

Saturday, July 31, 2010

MS-Office 2010......

வந்தாச்சு MS-Office 2010 !


அலுவலக பயன் பாட்டிற்கான ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கள் அனைத்திலும் முனனணியில் இருப்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஒபிஸ் தொகுப்பு என்பது யாவரும் அறிந்த விடயம். ஸ்டார் ஒபிஸ், கொரல் ஒபிஸ், ஓபன் ஒபிஸ் என பல ஒபிஸ் தொகுப்புக்கள் வெளி வந்தாலும் எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்புக்கு நிகரானது என எதனையும் குறிப்பிட முடியாது. இதற்கு நிகரான ஒரு ஒபிஸ் தொகுப்பு இது வரையில் வெளிவரவில்லை எனலாம்.

உலகில் பலராலும் அதிகம் பயன் படுத்தப்படும் இந்த மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிப்பு ஒபிஸ் 2010 இம்மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது. எனினும் இது Microsoft Office 2010 Technical Preview எனப்படும் துறை சார்ந்த வல்லுனர்களுக்கான விசேட பதிப்பாகும். பொதுமக்கள் பாவனைக்கு அடுத்த மாதமே (ஜூன்) கிடைக்கப் பெறும் என மைக்ரோஸொப்ட் அறிவித்துள்ளது. இது ஒபிஸ் தொகுப்பின் 14 வது வெளியீடாகும்.
எம்.எஸ்.ஒபிஸ் 2010 தொகுப்பின் சோதனைப் பதிப்பை (Beta Version) கடந்த வருடம் மைக்ரொஸொப்ட் நிறுவனம் இணையத்தினூடு வெளியிட்டது. இதனை இன்று வரை பல லட்சக் கணக்கான கணினி பயனர்கள் இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துள்ளனர்.

எம்.எஸ்.ஒபிஸ் 2010 பார்வைக்கு ஒபிஸ் 2007 போன்று தோன்றினாலும் அதில் ஏராளமான மாற்றங்களுடன் புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை உள்ளே நுளைந்து பார்க்கும் போதுதான் அறிந்து கொள்ள முடிகிறது.

இதிலுள்ள சிறப்பம்சங்களைச் சுருக்கமாகச் சொன்னால் பவர்பொயிண்டில் வீடியோ படங்களை எடிட் செய்தல், போட்டோ எடிட் செய்தல், மற்றும் அவுட்லுக்கில் இமெயில்களைக் கையாள்வதற்கான புதிய வசதிகள், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


பழைய ஒபிஸ் பதிப்புகளில் இருந்த மெனு, சப்மெனு கொண்ட இடை முகப்புக்குப் பதிலாக முன்னைய ஒபிஸ் 2007 பதிப்பில் ஓரளவு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ரிப்பன் இடைமுகப்பு (Ribbon Interface) முழுமையாக இந்த புதிய ஒபிஸ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒபிஸ் 2010 தொகுப்பிலுள்ள வர்ட், எக்ஸல் என அனைத்து மென்பொருள்களிலும் ரிப்பன் இடை முகப்பே முக்கிய இடம் பிடித்துள்ளது.

கணினி ஆவணங்களில் அடோபி (Adobe) நிறுவனம் உருவாக்கிய பீடிஎப் பைல் (PDF) வடிவம் அதிகம் பிரபல்யமானது. ஒபிஸ் 2010 ல் உள்ள அனைத்து மென்பொருள்களும் பீடிஎப் பைலை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. உதாரணமாக எம்.எஸ்.வர்டில் உருவாக்கிய ஒரு பைலை ஒரே க்ளிக்கில் பீடிஎப் பைலாக மாற்றிக் கொள்ளலாம்.

பவர் பொயிண்ட் ப்ரசண்டேசனில் நீங்கள் பயன் படுத்தும் வீடியோ க்ளிப் ஒன்றை எடிட் செய்ய வேண்டுமானால் வேறு வீடியோ எடிட்டிங் மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை. அதனைப் பவர் பொயிண்டிலேயே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது, வீடியோ பைல்களில் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்குவது மட்டுமன்றி மேலும் பல மெருகூட்டும் வசதிகளும் தரப்பட்டுள்ளன.

உங்கள் ஆவணங்களை விண்டோஸ் லைவ் (Windows Live) வழங்கும் ஸ்கை ட்ரைவ் (SkyDrive) எனும் இணையம் சார்ந்த சேமிப்பகங்களுக்கு அப்லோட் செய்து விட்டு அந்த பைல்களை உலகின் எப்பகுதியிலிருந்தும் அணுகக் கூடிய வசதியையும் ஒபிஸ் 2010 தருகிறது.

யூ டியூப் ( YouTube) போன்ற இணைய வீடியோக்களை பவர் பொயிண்ட் டில் இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. அதனையும் இலகுவாக கொப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். இணைக்க வேண்டிய வெப் வீடியோவின் Embed Code ஐ பிரதி செய்து ஒட்டி விட்டாலே போதுமானது.

இந்த ஒபிஸ் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிரதான மாற்றமாக அதன் இணையம் சார்ந்த பயன்பாட்டைக் குறிப்பிடலாம். அதாவது ஒபிஸ் தொகுப்பிலுள்ள வர்ட், எக்சல் போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை கணினியில் நிறுவாமலேயே இணையத்தினூடு இலவசமாக பயன் படுத்தும் வசதியை வழங்க விருக்கிறது. இவ்வாறு இணையத்தினூடு அணுகி அதனைப் பயன்படுத்துவதை வெப் எப் (Web App) எனப்படுகிறது. இது போன்ற சேவையை கூகில் நிறுவனம் ஏற்கனவே கூகில் டொக் (Google Doc) எனும் பெயரில் வழங்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

Screen Capture எனும் கருவி மூலம் திரையில் தோன்றுவதை முழுமையாகாவோ பகுதியாகவோ பட்ம் பிடித்து வர்ட், எக்ஸல் போன்ற எப்லிகேசன்களில் நுளத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

Office Home and Business 2010, Office Professional 2010, Office Professional Plus 2010 என பல வேறு பட்ட பயனர்களுக்கென ஒபிஸ் பதிப்பை வெளியிடவுள்ளது மைக்ரோஸொப்ட். அத்தோடு கையடக்கத் தொலைபேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் பயன் படுத்தக் கூடிய ஒபிஸ் 2010 பதிப்பையும் வெளியிடவிருக்கிறது.

முன்னைய ஒபிஸ் பதிப்புகள் Windows Mobile இயங்கு தளம் கொண்ட கையடக்கக் கணினிகளை மட்டுமே ஆதரித்தது. எனினும் தற்போதைய பதிப்பை ஐபோன் (iPhone) போன்ற விண்டோஸ் மொபைல் அல்லாத கையடக்கத் தொலைபேசிகளிலும் கையடக்கக் கணினிகளிலும் பயன் படுத்தலாம்.

ஒபிஸ் 2010 ஐ விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் 7 பதிப்பு இயங்கு தளங்களில் நிறுவ முடியும்.. இதை நிறுவுவதற்கான விசேட தேவைகள் ஏதும் கணினியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒபிஸ் 2007 பதிப்பு உங்கள் கணினியில் நிறுவ முடியுமானால் ஒபிஸ் 2010 ஐயும் இலகுவாக நிறுவி விடலாம்.

பீட்டா பதிப்பைப் பயன் படுத்திப் பார்த்ததில் எம்.எஸ்.ஒபிஸ் பல வருடங்களாக காத்து வரும் தன் பிரபல்யத்தை மேலும் பல தசாப்தங்கள் தக்க வைத்துக் கொள்ளும் என்பதே என் கருத்து.


-அனூப்-

இதுவரை பார்த்தவர்கள்

© 2008 காப்புரிமை தமிழ்கம்பியூட்டர் இணையம்